மீண்டும் அதிபராக இவருக்கே வாய்ப்பு அதிகம்

குடியரசு கட்சி மாநாட்டில் டிரம்ப் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. தி ஹில் நடத்திய கருத்துக் கணிப்பில், தேசிய அளவில் ஜோ பிடனின் முன்னணியானது சற்று குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஜோ பிடன், 50 சதவிகித வாக்காளர்களின் ஆதரவோடு முன்னிலை வகித்தார். டிரம்பிற்கு 44 சதவிகித வாக்காளர்கள் ஆதரவு அளித்தனர். குடியரசுக் கட்சி மாநாட்டைத் தொடங்குவதற்கு முந்தைய நாள் (ஆகஸ்ட் 23) நடந்த வாக்கெடுப்பில் … Read more

அமெரிக்காவில் தொழில்நுட்ப தரவை மாற்றியமைத்த சீன அதிகாரி

சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு முக்கியமான அமெரிக்க மென்பொருள் அல்லது தொழில்நுட்ப தரவை மாற்றியதற்காக குவானிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது விசா விண்ணப்பம்  நேர்காணல்களில் சீன இராணுவத்துடன் அவர் வைத்திருந்த தொடர்பை மறைத்து உள்ளார். குவான் நேற்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான குவான் லீ ஜூலை மாதம் தனது குடியிருப்பின் வெளியே ஒரு குப்பை தொட்டியில் சேதமடைந்த ஹார்ட் டிரைவை எறிந்தார். இதை தொடர்ந்து அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் அவரை  … Read more

வாக்குகளை கவர புது வியூகம் தீட்டும் டிரம்ப் குழுவினர்

கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் உயிரிழப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாலேயே பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியா தான் மிக அதிக சோதனைகளைச் செய்து வருகிறது என கூறினார். ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், 6 முக்கிய காரணிகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதன்படி தீவிர நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலை … Read more

அமெரிக்காவில் வீசிவரும் லோரோ  சூறாவளி நிலவரம்?

அமெரிக்காவின் லூயிஸியானா மாநிலத்தில் தற்போது வீசிவரும் லோரோ  சூறாவளியால் 4 பேர் இறந்தனர். வீடுகள் மீது மரங்கள் விழுந்ததால் அவர்கள் மாண்டதாக மாநில ஆளுநர் ஜான் பெல் எட்வார்ட்ஸ்  தெரிவித்தார். நேற்று கரையைக் கடந்த லோரோ  சூறாவளியால் பலத்தக் காற்றும், பல மணி நேர கனத்த மழையும் பெய்தது. தற்போது சூறாவளியின் வேகம் சற்று குறைந்துள்ளது. தேடல் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் தெரிவித்தார். வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வசிப்பிடங்களை வழங்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் கொரோனா வைரஸ் குறித்து ஆவேச பேச்சு

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

ஒலிம்பிக்கில் சாதனைகளை படைத்த அமெரிக்க இரட்டையர்

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இரட்டையர் பிரிவில் வெற்றிகரமான ஜோடியாக உருவெடுத்து எண்ணற்ற சாதனைகளை படைத்து இருக்கும் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் இரட்டை சகோதரர்கள் டென்னிஸ் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். 42 வயதான இருவரும் கூட்டாக 16 கிராண்ட்ஸ்லாம், 4 ஆண்கள் சாம்பியன்ஷிப் உள்பட 119 பட்டங்களை வாரி குவித்துள்ளனர். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும் வென்று இருக்கிறார்கள். 438 வாரங்கள் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தை அலங்கரித்த பெருமையும் இவர்களுக்கு உண்டு. ‘இன்னும் டென்னிஸ் விளையாட … Read more

அமெரிக்காவில் மூன்றாவது நாளாக தொடரும் வன்முறை

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தின் கேனோஷா  நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வன்முறை நீடிக்கிறது. நிலைமையைச் சமாளிக்கக் கூடுதல் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற 29 வயது கறுப்பின இளையர் காவல்துறையால் சுடப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் வன்முறை வெடித்தது. செவ்வாய் இரவு நடந்த வன்செயல்களில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமுற்றார். 17 வயது வெள்ளையின இளையர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய கும்பலுடன் … Read more

அமெரிக்காவையே எச்சரிக்கிறாதா இந்த நாடு?

சீனாவின் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் உளவு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF-26B, DF-21D ஆகிய 2 ஏவுகணைகளை சீனா தென்சீனக் கடலில் ஏவியுள்ளது. இதில், DF-21 ஏவுகணை விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது. DF-26B இடைநிலைத்தூர அணுஆயுத ஏவுகணையாகும். இதை குயிங்காய் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. DF-21D-ஐ ஜிஜியாங் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. மீடியம்-ரேஞ்ச் … Read more

அரையிறுதியில் இருந்து விலகுகிறாரா இந்த வீராங்கனை?

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரையிறுதியில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார். ஒசாகாவின் முடிவு டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  ஜேக்கப் பிளேக் மீதான தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக … Read more

நான் நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன் – கெவின் மேயர்

சீனாவைச் சேர்ந்த டிக்டாக் உள்பட 50-க்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது. பயனாளர்களின் தரவுகளை மற்றவர்களுக்கு அளிக்கிறது, தனியுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டு இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்க இருக்கிறது. அமெரிக்காவுக்கான டிக்டாக் அலுவலகம் கலிபோர்னியாவில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தேர்தலில் வெற்றி பெற சீனா எதிர்ப்பை தூண்டுவதற்காக இதை … Read more