பிரான்ஸில் ஒரு வீட்டில் அரங்கேறிய வினோத சம்பவம்

பிரான்ஸில் ஒரு வீட்டில் அரங்கேறிய வினோத சம்பவம்

விளையாட்டு வினையாக மாறும் என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே அந்த பழமொழிக்கு ஏற்றபடி பிரான்ஸில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸில் ஒரு சிறிய ஊரில் ஓர் ஈயை அடிக்க முயன்ற ஒருவர், தம் வீட்டின் ஒரு பகுதியையே கொளுத்திவிட்டார். சுமார் 80 வயதுகொண்ட முதியவர் ஒருவர் உணவு உண்ணும் வேலையில் ஈ ஒன்று அவரைச் சுற்றிச்சுற்றி வந்துள்ளது எரிச்சலடைந்த பெரியவர், பூச்சிகளைக் கொல்லும் மின்சார மட்டையால் அந்த ஈயை அடிக்க முயற்சி செய்தார். அந்த நேரம் பார்த்து … Read more

இங்கிலாந்து நாட்டில் நடுரோட்டில் கத்திக்குத்து சம்பவமா?

இங்கிலாந்து நாட்டில் நடுரோட்டில் கத்திக்குத்து சம்பவமா?

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹம் நகரில் கத்திக் குத்துச் சம்பந்தமான தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 27 வயது என்றும் அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் செல்லி ஓக்  பகுதியில் கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கத்திக் குத்துச் சம்பவங்கள் சுமார் இரண்டு மணிநேரத்தில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்ததாகப் புலனாய்வு அதிகாரி கூறினார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் … Read more

கொரோனா வைரஸ்தான் கடைசி என நினைத்து விடாதீர்கள்

கொரோனா வைரஸ்தான் கடைசி என நினைத்து விடாதீர்கள்

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எந்த வித முடிவும் எடுக்க முடியாமல் பிதுங்கி நிற்கின்றன.  ஒருபக்கம் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் , அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ்,’இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி … Read more

இங்கிலாந்து நாட்டில் நிலநடுக்கமா?

இங்கிலாந்து நாட்டில் நிலநடுக்கமா?

பெட்போர்டுஷைர் என்ற நகரம் இடம் இங்கிலாந்து நாட்டின் தென்பகுதியில்  பசார்டு என்ற இடத்தில் உள்ளது.   இந்த நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த  நிலநடுக்கம்  ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் வெடிகுண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டுள்ளது. இந்நிலடுக்கத்தினால், அந்த பகுதியில் இருந்த பல வீடுகள் அதிர்ந்துள்ளன.  வீடுகளின் கதவுகள் ஆடியுள்ளன.  சுவரில் பொருத்தப்பட்டிருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் குலுங்கின.  5 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதனால் … Read more

ஒன்பது லட்சத்தை நெருங்கிய கொரோனா பலி

ஒன்பது லட்சத்தை நெருங்கிய கொரோனா பலி

சீனாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 74 லட்சத்து 78 ஆயிரத்து 134 … Read more

சார்ஜாவில் புதிய முறையினை கையாளும் வனத்துறையினர்

சார்ஜாவில் புதிய முறையினை கையாளும் வனத்துறையினர்

சார்ஜாவில் உள்ள கல்பா பகுதியில் சதுப்புநில காட்டு பகுதியில் அரிய வகை இனமான அரேபிய மீன்கொத்தி பறவைகள் காணப்படுகிறது. இதன் முட்டைகள் மிக சிறியதாக உள்ளதால் சிறிய வகை உயிரினங்கள் அவற்றை உணவாக எடுத்துக்கொண்டு சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் அந்த பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சவாலாகவே இருந்து வந்தது. எண்ணிக்கையில் மிக குறைவான அளவே உள்ள இந்த பறவைகளை இனவிருத்தி செய்து அதிகரிக்க இன்குபேட்டர் முறையில் குஞ்சு பொறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்குபேட்டர் மூலம் குஞ்சு பொறிக்கப்பட்ட … Read more

பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா கொரோனா தடுப்பூசி?

பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா கொரோனா தடுப்பூசி?

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் … Read more

இந்தியா மீது கடுமையான விமர்சனத்தை கூறிவரும் சீனா

இந்தியா மீது கடுமையான விமர்சனத்தை கூறிவரும் சீனா

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சமீப காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. சீன லடாக் பகுதியில்  கலவரத்தை ஏற்படுத்தியதால் இந்திய பதிலடி கொடுக்கும் விதமாக 200க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இந்த நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கின்றன. எனினும், பதற்றம் தணிந்தபாடில்லை. சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால், பதற்றம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இந்தயா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது.  அதில் இந்திய … Read more

கொரோனா வைரஸால் இத்தனை பேர்தான் குணமாகியுள்ளனரா?

கொரோனா வைரஸால் இத்தனை பேர்தான் குணமாகியுள்ளனரா?

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸால் உலகமே பெரிய இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரசால் அனைத்து துறைகளும் மிகுந்த நஷ்டத்தை அடைந்து வருகிறது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 கோடி எண்பதாயிரதிற்கும் … Read more

 போராட்டக்குழுவில் முக்கிய தலைவர்கள் கடத்தல்

 போராட்டக்குழுவில் முக்கிய தலைவர்கள் கடத்தல்

பெலாரஸ் என்ற நாடு  தனி நாடாக அறிவிக்கப்பட்டது சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்தது. அந்த நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் 6-வது முறை இருந்துள்ளார்  26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அதிபர் அலெக்சாண்டர் தனது பதவியில் இருந்து விலகி அதிகாரத்தை எதிர்க்கட்சியிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு ஒன்று எதிர்க்கட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இவர்கள், … Read more