தென் அமெரிக்க நாட்டில் 6.4 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாட்டில் 6.4 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஓவல்லே நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் கடைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு … Read more

அமெரிக்காவை மிரட்டி வரும் கொரோனா

அமெரிக்காவை மிரட்டி வரும் கொரோனா

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.92 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது

நான் இந்தியாவை அதிகம் நேசிக்கும் நபராக உள்ளேன்

நான் இந்தியாவை அதிகம் நேசிக்கும் நபராக உள்ளேன்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்புறவு நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நண்பராக விளங்கி வருகிறார். அதேபோல் ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்தினரும் இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகின்றனர். டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு அவரது குடும்பத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் நபர் அவரது மகள் இவாங்கா டிரம்ப் ஆவார். இந்தநிலையில் தானும், தனது மகளும், மகனும் இந்தியாவை அதிகம் நேசிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை … Read more

அர்ஜெண்டினாவில் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா

அர்ஜெண்டினாவில் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜெண்டினா 10-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், அர்ஜெண்டினாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.71 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 9,924 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு சிக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.71 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா … Read more

இந்தியர்கள் பற்றி அமெரிக்க பிரதமர் இப்படி கூறலாமா?

இந்தியர்கள் பற்றி அமெரிக்க பிரதமர் இப்படி கூறலாமா?

அமெரிக்காவில் 1969 முதல் 1974 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ரிச்சர்ட்  நிக்சன் வெள்ளை மாளிகையின் தலைவர் எச்.ஆர். ஹால்டேமன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரிச்சர்ட் நிக்சன் இந்தியர்கள் குறித்து தரக்குறைவாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இந்திய பெண்கள் குறித்து ஆபாசமாகவும், இனரீதியாக இந்தியர்களை அவமதிக்கும் வகையிலும் அவர் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. உடல் ரீதியாகவும் இந்தியர்களை அவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியர்களை … Read more

அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் போலீஸ் காவலில் கறுப்பினத்தை சேர்ந்த டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிக்கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. அமைதியாக சென்ற பேரணி, நீதிமன்ற வீதியில் சென்றபோது, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். புரூடியை கைது செய்து போலீசார் அழைத்து சென்ற வீடியோ பதிவுகளை அவரது குடும்பத்தினர் இந்த வாரம் வெளியிட, அது போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் மாற்றியுள்ளது. அமெரிக்காவில் கடந்த  வார … Read more

எந்த விதத்திலும் இனி டிரம்பை நம்புவது அவசியமில்லை

எந்த விதத்திலும் இனி டிரம்பை நம்புவது அவசியமில்லை

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அதிபர் தேர்தலுக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். சமீபத்தில் டிரம்ப் கூறும் போது, ‘அமெரிக்கா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது’ என்று தெரிவித்தார். மேலும் தடுப்பூசி வினியோகத்துக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் தயாராக இருக்கும்படி மாகாணங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே 3-ம் கட்ட சோதனைக்கு முன்பே தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அமெரிக்க உணவு மற்றும் … Read more

அமெரிக்காவில் படகு அணிவகுப்பால் நிகழ்ந்த விபரிதம்

அமெரிக்காவில் படகு அணிவகுப்பால் நிகழ்ந்த விபரிதம்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரித்து டெக்சாஸ் மாநிலத்தில் அவரது ஆதரவாளர்கள் படகு அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தனர். டெக்சாஸ் தலைநகர் ஆஸ்டினுக்கு அருகில் உள்ள டிராவிஸ் ஏரியில் நேற்று இந்த அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பில் ஏராளமானோர் பங்கேற்று படகுகளை உற்சாகத்துடன் செலுத்தினர். அப்போது பல்வேறு படகுகள் … Read more

சிறு தவறுக்காக முதலாளியை கொன்ற தொழிலாளி

சிறு தவறுக்காக முதலாளியை கொன்ற தொழிலாளி

துபாயில் உள்ள அல் குவாஸ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த 21 வயது வாலிபர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் அவர் தாய் நாட்டிற்கு செல்வதற்காக தனக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று கம்பெனி மேலாளரிடம் கேட்டுள்ளார். அவர் விடுப்பு வழங்காமல் திட்டி அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி, மற்ற ஊழியர்கள் வெளியே சென்ற சமயத்தில் தனியாக இருந்த மேலாளரை கத்தியால் கழுத்தை அறுத்தும் சுத்தியலால் தாக்கியும் கொலை … Read more

கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்

கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்

ஐ.நா.சபையின் தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் எல்லா நாடுகளில் உள்ள மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமாகும். ஏதாவது ஒரு நாட்டுக்கு கிடைக்காமல் போனாலும் கொரோனாவின் அச்சுறுத்தலை இந்த உலகம் தொடர்ந்து சந்திக்க வேண்டி இருக்கும். ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு கிடைக்காமல் போனால் அந்த நாடுகள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள் அனைத்து … Read more