விமான நிலையத்தில் புதிய முறையை கொண்டுவந்துள்ள துபாய்

விமான நிலையத்தில் புதிய முறையை கொண்டுவந்துள்ள துபாய்

துபாயில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சர்வதேச விமான நிலையத்தில் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல தொடங்கியுள்ளனர். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விமானத்திற்கு செல்லும் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டின் முகப்பு பகுதியை ‘ஸ்மார்ட் கேட்’ நுழைவு பகுதியில் உள்ள உணரும் கருவியில் வைத்தால் போதும். தானியங்கி முறையில் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு குடியேற்ற பிரிவை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். அதாவது கண்ணாடி கதவு தானாக திறந்து வழிவிடும். இதன் … Read more

சாலையோரம் வெடித்த கண்ணிவெடியால் மூன்று பேர் பலி

சாலையோரம் வெடித்த கண்ணிவெடியால் மூன்று பேர் பலி

ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் சாலையோரம் பயங்கரவாதிகள் கண்ணிவெடியை புதைத்து வைத்திருந்தனர். இன்று காலை அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து சென்றபோது திடீரென கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். கண்ணிவெடி தாக்குதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

வெனிசுலா அதிபரை கொல்ல திட்டம் தீட்டுகிறாரா டிரம்ப்

வெனிசுலா அதிபரை கொல்ல திட்டம் தீட்டுகிறாரா டிரம்ப்

எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், அரசியல் குழப்பமும் நிலவி வருகிறது. தனது நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு காரணம் என்றும், வெனிசுலாவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாகவும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ … Read more

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும், … Read more

அமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் நடக்க போகும் முக்கிய நிகழ்வு

அமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் நடக்க போகும் முக்கிய நிகழ்வு

அமெரிக்காவில் தற்போது பெரிய பிரச்சனையாக வெடித்து வருவது கருப்பினத்தவர் மீது போலீஸ்  வெளிப்படுத்தும் வேற்றுமைதான்.  கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீஸ் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன இதற்கிடையில், நவம்பர் மாதம் அமெரிக்காவில் … Read more

இரண்டு கோடியை நெருங்கி வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

இரண்டு கோடியை நெருங்கி வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் … Read more

தென் அமெரிக்காவில் அரங்கேறிய வினோதமான சம்பவம்

தென் அமெரிக்காவில் அரங்கேறிய வினோதமான சம்பவம்

தென் அமெரிக்க நாடான பெருவில் கிருமித்தொற்றுக்கான கட்டுப்பாடுகளை மீறிய 8 கோமாளிகளைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அந்த 8 பேரும் ஒரே தொழிலில் ஈடுபடும் சக கலைஞரின் இறுதிச் சடங்கிற்குச் சென்றுள்ளனர். இறந்தவரை வழியனுப்பி வைக்கும்வண்ணம் அவர்கள் இறுதிச் சடங்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. தென்னமெரிக்காவில் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் வரம்பை மீறி நடந்துகொண்டதற்காக அந்த 8 கோமாளிகளையும் அதிகாரிகள் கைதுசெய்தனர்.

பாகிஸ்தானிலும் தடை செய்ய இருக்கும் செயலிகள்

பாகிஸ்தானிலும் தடை செய்ய இருக்கும் செயலிகள்

‘ஒழுக்கமற்றவை’ என்று வகைப்படுத்தியுள்ள ஐந்து செயலிகளைப் பாகிஸ்தான் தடைசெய்துள்ளது. Tinder, Grindr, SayHi, Tagged, Skout போன்ற சமூக ஊடகத் தளங்கள் பாகிஸ்தானியச் சட்டத்திற்கு உகந்தவகையில் தளங்களை நிர்வகிக்கத் தவறியதாய்க் கூறப்பட்டது. ஆனால் பெரியவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அந்தச் செயலிகளைப் பயன்படுத்த விரும்பினால், அவற்றுக்கு அரசாங்கம் தடைவிதிப்பதற்கு உரிமை இல்லை என்று மின்னிலக்க உரிமைக்குழு குரல் எழுப்பியுள்ளது. செயலிகளைத் தடைசெய்தாலும் அவற்றைப் பயன்படுத்த மக்கள் மாற்றுவழிகளைக் கண்டறிவர் என்றார் Bytes For All உரிமை அமைப்பின் இயக்குநர். … Read more

ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் இத்தனை முதலைகள் பிடிபட்டதா?

ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் இத்தனை முதலைகள் பிடிபட்டதா?

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் 14.4 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது. பிடிபட்ட முதலை, முதலைப் பண்ணைக்கு அனுப்பப்படும். அங்கு இனப்பெருக்கத்திற்கு அதன் பங்கை அளிக்கும். கடல்வாழ் முதலை, முதலை வகைகளிலேயே ஆகப் பெரியது. ஆண் முதலைகள் 7 மீட்டர் நீளம் வரை வளரலாம், 997.9 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கலாம். அவை கரையோரங்களில் வாழும். தற்போது, ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் சுமார் 100,000 கடல்வாழ் முதலைகள் இருப்பாதாக அரசாங்கம் தகவல் அளித்துள்ளது. இந்த ஆண்டு, மொத்தம் 167 … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த கண்ணில்படுபவர்களை சுட உத்தரவா?

கொரோனாவை கட்டுப்படுத்த கண்ணில்படுபவர்களை சுட உத்தரவா?

வடகொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கிம் ஜாங் உன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.கடுமையான இந்த புதிய நடவடிக்கையானது வியாழக்கிழமை நள்ளிரவில் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுடனான வடகொரியாவின் எல்லையிலிருந்து அரை மைல் தூரத்திற்குள் தென்படும் எவரையும் கண்டதும் சுட்டுக் கொல்ல நாட்டின் ராணுவத்தினர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, வடகொரிய பொதுமக்கள் சீன எல்லை அருகே சென்றதற்கான காரணத்தைப் பொருட்படுத்தாமல் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என … Read more