6 அடி வரை உயரமாக வளர இந்த மேஜிக் பாலை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!

0
148
#image_title

6 அடி வரை உயரமாக வளர இந்த மேஜிக் பாலை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!

ஊட்டச்சத்து ககுறைபாட்டால் உடல் வளர்ச்சி இல்லாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். இதனால் குள்ளமாக இருப்பவர்கள் பிறரின் கேலிகிண்டலால் மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். உடல் உயரம் குறைவாக இருப்பவர்கள் உயரமாக வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தவறாமல் பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்…

*பால்
*பாதாம் பருப்பு
*முந்திரி பருப்பு
*மஞ்சள்
*பிஸ்தா

ஒரு கிண்ணத்தில் 10 பாதாம் பருப்பு, 5 முந்திரி பருப்பு, 5 பிஸ்தா பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

பிறகு பாதாம் பருப்பை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விடவும். அதன் பின்னர் ஊறவைத்த பிஸ்தா மற்றும் முந்திரி பருப்பை போட்டு அரைக்கவும்.

அதன் பின்னர் சிறிது பால் சேர்த்து அரைத்து விழுதாக்கவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.

பால் கொதிக்கும் தருணத்தில் அரைத்த விழுதை சேர்த்து காய்ச்சவும். பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டிக் கொள்ளவும்.

இந்த பாலில் சுவைக்காக சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்கவும். இந்த பாலை தினமும் குடித்து வந்தால் உடல் வளர்ச்சி மற்றும் உயரம் அதிகரிக்கும்.