கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிவார்டு ஏற்படுத்தி பாதிப்பிலிருந்து மக்களை காக்க தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 130 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 4,417 மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.
இந்தியா சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு வகையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே போல தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையதில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் நவின கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை தனிவார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க 6 தனித்தனி அறைகளுடன் படுக்கை அறைகளின் வசதி கொண்ட தனி வார்டு தயாராக உள்ளது. அனைத்து அறைகளிலும் நவின மருத்துவ கருவிகள் இருக்கின்றன. இந்த வார்டில் 10 டாக்டர்கள், 18 நர்ஸ்கள், 20 மருத்துவ உழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த வார்டில் பணி புரியும் அனைவருக்கும் பாதுகாப்பு உடைகள், முக கவசங்கள் மற்றும் மூக்கு கண்ணாடி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டவர்கள் நோய் அறிகுறி உள்ளவர்கள் விமான நிலையத்தில் இருந்து கொண்டு வர சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.