கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் கொலை! நண்பர்கள் செய்த சதி!

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் கொலை! நண்பர்கள் செய்த சதி!

கோவை மாவட்டம் சிவகங்கை தொகுதி காளியான் கோவில்  கண்டானப்பட்டியைச் சேர்ந்தவர் காளையப்பன் 32. இவர் கோவை மாவட்டம் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில், டாஸ்மாக் கடை வைத்து நடத்தி  வருகிறார். மேலும் இவரின் மீது சிலருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இவரை  மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

மேலும் இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா மற்றும் போலீசார் கொண்ட தனி படை குழுவினர் அமைக்கப்பட்டது.  மேலும் கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றார்கள்.

இந்நிலையில்  திருப்பூரில் பார் நடத்தி வந்த, சிவகங்கையை சேர்ந்த ராஜ கண்ணப்பன், 39 என்பவரை போலீசார் கைது செய்தனர். தாராபுரத்தில் ராஜகண்ணப்பனுக்கு சொந்தமான டாஸ்மாக் பாரை, காளையப்பன் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார் என்பது தெரிய வந்தது.

மேலும் பல பிரச்சினை சம்பந்தமாக இருவருக்குள்ளும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ராஜ கண்ணப்பன் மற்றும் ஐந்து பேர் சிறுமுகை வந்து காளியப்பனை வெட்டி கொலை செய்துள்ளனர் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.தலை  மறைவாக உள்ள ஐந்து பேர்ரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment