மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை கஞ்சி!

0
181
#image_title

மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை கஞ்சி!

எலும்புகளுக்கு வலிமை இல்லாமல் போதல், உடல் பருமன், அதிக உடல் உழைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மூட்டு வலி, வீக்கம், ஜவ்வு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்து விடுகிறது.

இந்த மூட்டு வலி பாதிப்பு நீங்க முருங்கை கீரை, பச்சரிசி உள்ளிட்ட சில பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட மூலிகை பொடி கஞ்சியை சாப்பிட்டு வரவும்.

தேவையான பொருட்கள்:

*முருங்கை கீரை – 1 கட்டு
*பச்சரிசி – 1/2 கிலோ
*சுக்கு – 10 கிராம்
*மிளகு – 50 கிராம்
*பாசிப்பருப்பு – 1/4 கிலோ
*ஏலக்காய் – 5

செய்முறை

ஒரு கட்டு முருங்கை கீரையை அலசி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு தாம்பூலத்தில் போட்டு அதில் 1/2 கிலோ பச்சரிசி, 10 கிராம் சுக்கு இடித்தது, 50 கிராம் கருப்பு மிளகு, 1/4 கிலோ பாசிப்பருப்பு மற்றும் 5 ஏலக்காய் இடித்து கலந்து விடவும்.

இந்த தாம்பூலத்தை வெயிலில் வைத்து ஒரு காட்டன் துணியால் மூடி விடவும்.

அரிசி கலவை அனைத்தும் நன்கு காய்ந்து வந்ததும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் கொட்டி அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

இதை ஒரு டப்பாவில் போட்டு சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை…

ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் 1 ஸ்பூன் அளவு அரைத்த மாவு சேர்த்து கலந்து கஞ்சி காய்ச்சிக் கொள்ளவும்.

இந்த கஞ்சியை தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.