சர்க்கரை நோய்க்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை பொடி..!

0
162
#image_title

சர்க்கரை நோய்க்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை பொடி..!

சர்க்கரை நோய்க்கு தாயகமான இந்தியாவில் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிஞ்சு குழந்தைக்கு கூட இன்று சர்க்கரை நோய் பாதிப்பு எற்படத் தொடங்கிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பரம்பரைத் தன்மை. நம் அப்பா, அம்மா இரத்த உறவுகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் நமக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

சர்க்கரை நோய் ஆளை உருக்கி எடுத்து விடும். அவ்வப்போது சர்க்கரை டெஸ்ட் எடுத்துக் கொள்வது நல்லது. இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் உடலில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உணவு முறையில் கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் மூலிகை பொடி…

1)கோவைக்காய்
2)சீனி அவரை
3)வெந்தயம்
4)நாவல் பழம்
5)கொய்யா இலை

பத்து கோவைக்காய், ஒரு கைப்பிடி அளவு சீனி அவரை, ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

வெந்தயம் 1/4 கப் அளவு எடுத்து தண்ணீர் ஊறவைத்து முளைகட்டி பொடி செய்து கொள்ளவும்.

அடுத்து 10 நாவல் பழத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் கொய்யா இலை + கோவைக்காய் + சீனி அவரை பொடி 1 ஸ்பூன் சேர்க்கவும். பிறகு ஒரு ஸ்பூன் வெந்தய பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள நாவல் பழச் சாற்றை அதில் சேர்த்து கொதிக்க ஒரு கிளாஸிற்கு மாற்றி குடிக்கவும்.