பயங்கரவாதத்தின் கொடூர யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் ‘தி கேரளா ஸ்டோரி’!! மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு!

0
182
#image_title

பயங்கரவாதத்தின் கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு கொடுக்கப்படுகிறது அம் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அதிகாரப்பூர் அறிவிப்பு.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசரில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு புறம், நேற்று இப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வடமாநிலங்களில் இப்படம் நேற்று முதல் நாளில் ரூ.6.5 கோடி வரை வசூல் கிடைத்ததாகவும் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி வரை வசூல் ஈட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ,பயங்கரவாதத்தின் கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு கொடுக்கப்படுகிறது. அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.