ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்!

0
249
#image_title

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்!

டீ, காபி நீண்ட நேரம் ஆறாமல் இருக்க ப்ளாஸ்க் பயன்படுத்துவது வழக்கம். இவ்வாறு அடிக்கடி பயன்படுத்தும் ப்ளாஸ்க்கில் டீ, காபி கறை படிந்து அவை நாளடைவில் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும்.

இதனால் ப்ளாஸ்க்கை பயன்படுத்த முடியாமல் தூக்கி எறியும் நிலை ஏற்படும். ஆனால் இந்த அழுக்கு கறை, டீ, காபி வாடை நீக்க செலவில்லாத எளிய வழி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

எலுமிச்சை சாறு
பேக்கிங் சோடா
வெந்நீர்

டீ, காபி வாடை அடிக்கும் பிளாஸ்கை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 1 ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும்.

பிறகு அதில் வெந்நீர் ஊற்றி நிரப்பி 10 நிமிடங்கள் வரை ஊற விடவும். பிறகு ஒரு ஸ்க்ரப்பர் பயன்படுத்தி பிளாஸ்கின் உள் சுத்தம் செய்யவும்.

இந்த முறையில் ப்ளாஸ்கை சுத்தம் செய்தால் டீ, காபி வாடை அடிக்காமல் புதிது போன்று பளிச்சிடும்.

ப்ளாஸ்க்கை சுத்தம் செய்யும் முறை..

வினிகர்
எலுமிச்சை சாறு
கல் உப்பு
வெந்நீர்
முட்டை ஓடு
அரிசி

ப்ளாஸ்க்கில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறு, கல் உப்பு சிறிதளவு, வினிகர் 1/4 டம்ளர், 1 முட்டை ஓட்டு, அரிசி சிறிதளவு போட்டு கலந்து விடவும். பிறகு அதில் வெந்நீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.

இதை 15 நிமிடங்களுக்கு ஊறவிட்டு பிறகு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்தால் ப்ளாஸ்க்கில் அழுக்கு கறை, வாடை நீங்கி புதிது போன்று பளிச்சிடும்.