பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது !

Photo of author

By Parthipan K

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது !

வேளச்சேரி போலீசார் நேற்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்போது சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பிடித்து விசராணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர் . அந்த பையில் போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணையில் மருந்து பொருட்கள் விற்பனையாளர்கள் போல போதை பொருட்கள் கொடுங்கையூர் பகுதியில்லிருந்து வாங்கி வந்து வேளச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றது தெரியவந்தது. இவர்கள் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைபொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.