சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!

0
252
#image_title

சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்! 

ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரில் உள்ள பர்சூ பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தானது ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பர்சூ என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் பீகாரைச் சேர்ந்த 4 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 28 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 23 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்துக்கான  குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்துக்கான காரணம் என்ன என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.

 

Previous articleபெற்றோர்களே உஷார்! முகவரி கேட்பது போல் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் பதற வைக்கும் பகீர் சம்பவம்!
Next articleநாளை களம் இறங்கும் ரோஹித் சர்மா! தொடரை வெல்லுமா? இந்தியா எகிறும் எதிர்பார்ப்பு!