பெற்றோர்களே உஷார்! முகவரி கேட்பது போல் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் பதற வைக்கும் பகீர் சம்பவம்!

0
309
#image_title

பெற்றோர்களே உஷார்! முகவரி கேட்பது போல் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் பதற வைக்கும் பகீர் சம்பவம்! 

குழந்தையிடம் முகவரி கேட்பது போல் அவரை கடத்திய வட மாநில கும்பல். தப்பி வந்து சிறுமி மூலம் போலீசில் புகார். பதை பதைக்கும் இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

முகவரி கேட்பது போல் நாடகமாடிய அந்த கும்பல் 12 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். புத்திசாலித்தனமாக கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தை உள்ள சமயபுரம் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த வட மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் அந்த சிறுமியிடம் முகவரி கேட்பது போல் நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது அந்த சிறுமி தனியாக நின்று கொண்டிருப்பதை அறிந்த கும்பல் அவரிடம் நாடகமாடி காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

சென்று கொண்டிருந்த கார் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நின்றுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறுமி சமயோசிதமாக கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்து வந்துள்ளார். தனது வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை பற்றி தெரிவித்துள்ளார்.

இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர் சமயபுரம்  காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தனர். சிறுமி கூறிய அடையாளங்களையும் சிசிடிவி காட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு போலீசார் ஒரு பெண் உட்பட மூன்று வட மாநிலத்தவரை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலேயே முகவரி கேட்பது போல் நாடகமாடி குழந்தையை கடத்திய சம்பவம் வகி கிளப்பியுள்ளது. போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

Previous articleகொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! 
Next articleசாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!