நாளை களம் இறங்கும் ரோஹித் சர்மா! தொடரை வெல்லுமா? இந்தியா எகிறும் எதிர்பார்ப்பு! 

0
258
#image_title

நாளை களம் இறங்கும் ரோஹித் சர்மா! தொடரை வெல்லுமா? இந்தியா எகிறும் எதிர்பார்ப்பு! 

நாளை 2-வது ஒரு நாள் போட்டி நடைபெற இருப்பதால் தொடரை இந்தியா வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் முதலாவது ஆட்டத்தில் விளையாடாத ரோகித் சர்மா இந்த போட்டியில் திரும்பியுள்ளது மேலும் அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இந்தியாவிடம் வெற்றி வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்தது. மேலும் அந்த அணிக்கு பின்னடைவாக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.

இதையடுத்து 2-வது ஒரு நாள் போட்டி நாளை மார்ச் 19ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பகல் 1:30 மணிக்கு தொடங்க இருக்கிறது. மேலும் முதலாம் ஆட்டத்தில் விளையாடாத இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாட  அணிக்கு திரும்புகிறார் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நாளை நடக்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம். எனவே தொடரை வெல்லுமா இந்திய அணி என ஆர்வத்துடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவிடம் தொடரை இழந்த ஆஸ்திரேலியா அணி நாளை நடக்கும் ஒரு நாள் போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும். எனவே நாளை நடைபெறும் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.