இந்த முள் உள்ள பழம் மாரடைப்பு புற்றுநோய் வருவதை தடுக்கும்!

Photo of author

By Divya

இந்த முள் உள்ள பழம் மாரடைப்பு புற்றுநோய் வருவதை தடுக்கும்!

உங்களில் பலருக்கு சீத்தா பழம் பிடித்தவையாக இருக்கும். பச்சை நிறத் தோல் போர்த்தி அதனுள் இனிப்பு சுவை கொண்ட வெள்ளை சதை பற்று காணப்படும். பழத்தின் சதை பற்று 50% என்றால் அதன் விதை 50% என்று இருக்கும். சீத்தா பழத்தில் பச்சை, சிவப்பு என இரு வகைகள் தான் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கும் முள் சீத்தா என்ற வகை இருக்கிறது என்று தெரிய வாய்ப்பு குறைவு.

புற்றுநோய், சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை பற்றி தெரிய வாய்ப்பு இருக்கிறது. இந்த முள் சீத்தா ஏகப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டிருக்கின்றது.

நீர் சத்து, மாவுச்சத்து, தாதுக்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் முள் சீத்தா வயிற்றுப்போக்கை குணப்படுத்தக் கூடியது. முள் சீத்தாவின் உள் பகுதியை அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனை நீங்கும்.

முள் சீத்தா இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து எளிதில் தப்பித்துக் கொள்ள முடியும்.

இந்த பழம் சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சீராவதோடு இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

முள் சீத்தா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவது தடுக்கப்படும்.

வாரம் ஒருமுறை முள் சீத்தா பழத்தின் சாறு அருந்தி வந்தால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.