மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!! 

0
106
The head teacher asked the students to do that!! Bokso flowed!!
The head teacher asked the students to do that!! Bokso flowed!!

மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!! 

பள்ளி மாணவிகளை மசாஜ் செய்யுமாறு கூறிய தலைமை ஆசிரியர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர்  அருகில் உள்ள கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 144 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மேட்டூர்  மாதையன் குட்டை ஜீவா நகரை சேர்ந்த ராஜா வயது 51, என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தலைமையாசிரியர் ராஜா தனது பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை அறைக்கு அழைத்து தினமும் கை, கால்களை அமுக்கிவிட்டு தலையை மசாஜ் செய்து விடுமாறு கூறியுள்ளார். இது பற்றி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தலைமையாசிரியர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து சென்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தலைமையாசிரியர் ராஜா மீது கற்களை வீசி தாக்க முயற்சி செய்தனர். போலீசார் ராஜாவை அருகில் உள்ள ஒரு வகுப்பறைக்குள் பூட்டி வைத்து பாதுகாத்தனர்.

ராஜாவை கைது செய்ய கோரி மேட்டூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் ஏராளமான பெற்றோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை அறிந்த மேட்டூர் ஆர்டிஓ- தணிகாசலம், தாசில்தார்- முத்துராஜா, டிஎஸ்பி -மாரிமுத்து கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் பெற்றோரிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கட்டாயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சமாதானம் அடைந்த பெற்றோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீரென மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் போலீசார் கடுமையான பாதுகாப்புடன் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தலைமை ஆசிரியர் ராஜாவை அழைத்துச் சென்றனர். ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளதால் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி ராஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

Previous articleஇந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்… மசோதாவை தாக்கல் செய்த பாஜக!!
Next articleஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!