ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!

0
37

 

ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்…

 

ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் 6 வெளிநாட்டினரை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

ஈக்விடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் வேட்பாளர் பெர்ணான்டோ வில்வசென்சியோ அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் பிரச்சாரத்தை முடித்து வாகனத்திற்கு ஏறச் செல்லும் பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையடுத்து ஈக்விடார் நாட்டில் 60 நாட்கள் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வேட்பாளர் பெர்ணான்டோ வில்வசென்சியோ சுட்டுக் கொலை செய்யபட்டவரும் அதற்கு காரணமான அனைவரும் நிச்சியமாக தண்டிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு தற்போதைய அதிபர் கீரல்மோ லஸோ அவர்கள் அறிவித்தார்.

 

இதையடுத்து அதிபர் வேட்பாளர் பெர்ணான்டோ வில்வசென்சியோ சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட ஆறு நபர்களும் அதிபர் வேட்பாளர் பெர்ணான்டோ வில்வசென்சியோ அவர்களை சுட்டு கொன்ற அந்த அடையாளம் தெரியாத நபரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 6 வெளிநாட்டவர்களும் ஈக்விடார் நாட்டின் தலைநகரான குயிட்டோவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.