தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
பீகார் மாநிலம் அராரியார் மாவட்ட கூடுதல் மற்றும் ஸ்டேஷனல் நீதிமன்ற நீதிபதியாக சகித்காந்த் ராய் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் 6 வயது சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தார் இந்நிலையில் அவர் ஒரே நாளில் அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்ததாகவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதாகவும் தெரிய வருகிறது.
இதனால் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனால் உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் சகித்காந்த் என்பவரை பணியிட நீக்கம் செய்தது. மேலும் இது குறித்து இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சகித்காந்த்ராய் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை நீதி சிறிய லலித் மற்றும் எஸ்.ஆர் பேட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் நீதிபதி சகித் காந்த்ராய் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகி வாதாடினார். ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கை ஒரே நாளில் விசாரித்து குற்றவாளிக்கு நீதிபதி சாகித்காந்தராய் ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் அந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு மனுவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படவில்லை.
மற்றொரு வழக்கை நான்கு நாள்கள் விசாரித்து குற்றவாளிக்கு நீதிபதி மரண நிலை விதித்து தீர்ப்பளித்தால் இது போன்ற தீர்ப்புகளால் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள் அதனால் நீதிபதி பாரபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளது மேலும் அவருக்கு பதவி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது என்று வாதாடினார்.
மேலும் இதைக் கேட்ட நீதிபதிகள் எந்த ஒரு வழக்கையும் தீவிர விசாரணை நடத்திய பிறகு தான் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள். மேலும் தீர்ப்பளிக்கும் நாளிலேயே தண்டனை விவரம் அறிவிக்க கூடாது என்றும் ஆயுள் தண்டனை ,மரண தண்டனை ஆகியவை ஒருவரின் வாழ்க்கையுடன் தொடர்புடையவை அந்த வழக்குகளின் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் அதற்கு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை உதாரணமாக பார்க்க வேண்டும் எனவும் கூறினார்கள். மேலும் இந்த மனு மீது பீகார் அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.