ஒரு இரவில் தொங்கும் தொப்பையை குறைக்கும் மேஜிக் பானம்..!!

ஒரு இரவில் தொங்கும் தொப்பையை குறைக்கும் மேஜிக் பானம்..!!

உடல் எடை அதிகமாக இருபவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என்று அனைவரும் தொப்பை இருக்கிறது. இவ்வாறு இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடும். தொப்பை இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே தொப்பை மற்றும் உடல் பருமனை அவசியம் குறைக்க வேண்டும்.

தொப்பை ஏற்படக் காரணங்கள்:-

*உடல் உழைப்பு இல்லாமை

*அதிக இனிப்பு உணவு

*எண்ணெய் உணவு

*முறையற்ற தூக்கம்

*வேலைப்பளு

*மன அழுத்தம்

*அதிகளவு உணவு உட்கொள்ளுதல்

தொப்பையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்…

தேவையான பொருட்கள்:-

*சீரகம்

*எலுமிச்சை சாறு

*தேன்

செய்முறை..,

ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி இடித்த சீரகத்தை சேர்த்து1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.

மறுநாள் காலையில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சீரகம் ஊறவைத்த தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து அதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி கலந்து பருகவும்.

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் வயிற்றுக் கீழ் தொங்கி கிடந்த தொப்பை சில தினங்களில் கரைந்து விடும்.

இந்த பானத்தை குடிக்க தொடங்கிய பின்னர் அதிகப்படியான எண்ணெய் உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் காலையில் உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவைகளை செய்வதை வழக்கமாக்கி கொள்ளவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் தொப்பை கிடுகிடுவென குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.