நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா!

0
186
#image_title

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா!

பதினொறு ஆண்டுக்கு மேலாக இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டம் 1995ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு இந்த சட்டத்திருத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது, ஆறு ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கும் இந்திய குடியுறுமை வழங்கலாம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,வங்கதேசங்களிலில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்க்கொண்டவர்கள், அதிலும் இந்து, சீக்கிய, புத்த, கிறுத்தவர்கள் உள்ளிட்டோர்களிடம் உறிய ஆவணங்கள் இல்லை என்றாலும் அவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டது.

ஆனால், அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் இஸ்லாமியர்கள் மற்றும் நீண்ட காலமாக அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுறுமை வழங்க இந்த சட்டத்தில் இடமில்லை என்ற இந்த மசோதா 2019 ஆம் ஆண்டு மக்களவையில் பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேறியது, மாநிலங்களவையில் அதிமுக ஆதரவுடன் மசோதா நிறைவேற்றி குடியரசு தலைவரிடம் ஒப்பதல் பெறப்பட்டு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்திய குடியுரிமை அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது, அதன்படி இந்திய வம்சாவழியினரை திருமணம் செய்தவர்கள் அல்லது இந்திய குடியுரிமை பெற்றவர்களை திருமணம் செய்தவர்கள், ஓசிஐ கார்டு வைத்திறுக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்,18 வயது நிரம்பாத வெளிநாட்டினர் இந்திய குடியுரிமை பெற வேண்டுமேனில் அவர்களது பெற்றோர்களில் யாரோ ஒருவர் குடியுரிமை பெற்றிறுக்க வேண்டும்.

மேல் காணும் தகுதியுடையவர்கள் ஏதேனும் இரண்டு தகுதி வாய்ந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அவை சரியானவை தான் என்று இந்திய குடிமகன் ஒருவர் பிரமான பத்திரம் தாக்கல் செய்யவேண்டும், அரசியல் அமைப்பில் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியை பேசவோ, படிக்கவோ தெரியவேண்டும் இந்த தகுதியுடையவர்கள் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள இணையதளத்தில் பதவு செய்து குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம்.

Previous articleஉங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!!
Next articleதேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை!