தேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை!

0
134
#image_title

தேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை!

அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நிலையான தலைமை மற்றும் கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் நிறைந்துள்ள நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பழனிசாமி அதிமுக தனித்து போட்டியிடுவோம் எனவும் பன்னீர்செல்வம் பாஜகவுடனும் கூட்டணியை உறுதிச்செய்துள்ளனர் இந்த நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடடிக்கு நோட்டீஸ் அனுப்பி மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளது.

உட்கட்சி விவகாரங்கள் உள்ளிட்ட உட்கட்சி உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார், இதுதொடர்பாக அவர் கடந்த 28 ஆம் தேதி உச்சநீதிமன்றத்திலும் மனு அளித்துள்ளார்.

இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கிருஷ்ணமூர்த்தி அளித்துள்ள இரட்டை இலை தொடர்பான புகாருக்கு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் தாங்கள் தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என கூறிவரும் நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

author avatar
Savitha