விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !..

Photo of author

By Parthipan K

 

விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !..

தமிழக அரசு கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர  எல்லா முயற்சிகளையும் மிகத் தீவிரமாகசெயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் பரவலை நிலையை கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுளோம்.

இந்நிலையில் எதிர் கட்சி தலைவர் இதனை புரலை என கூறியிருந்தார்.இதில் கோபமடைந்த மா.சு வீணான வதந்திகளை எல்லாம் பரப்ப உங்களுக்கு  அழகு இல்லை என்றார். மேலும் இந்த திட்டம் மூலம் இதுவரை சுமார் 83,45,942 பேர் பயன் பெற்று உள்ளார்கள் எனவும் ஒவ்வொரு நாளும் இந்தத் திட்டம் மூலம் ஏழை மக்கள் மிகப் பெரிய அளவில் பயன் பெறுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்தபடியாக தமிழகத்திலுள்ள  அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து  கூறியதாவது ,

தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல் படுத்தப்படும். இந்த அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, தொழில், மருத்துவ குறிப்புகள் இடம் பெற்றிருக்கும்.

இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே நேரில் சென்று சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படும்.மாநிலம் முழுவதும் 5.98 கோடி முதியவர்கள் உள்ளனர். அவர்களில் 4.48 கோடி பேர் கடந்த ஒரு ஆண்டில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 33 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தம், 23.1 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 16.8 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இரண்டும் உள்ளது. சென்னையில் இதுவரை 17 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.9 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும், 1.5 பேர் சர்க்கரை வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கி வருகிறார்கள். இதுவரை 83 லட்சம் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும்  அவர் தெரிவித்தார்.அவர் கூறப்பட்ட தகவல் அனைத்தும் மக்களிடையே மகிழ்ச்சியை அளித்து வருகிறது.இதனால் ஏழை ,எளிய மக்கள்  பெருமளவு பயனடைவார்கள் என பல தலைவர்களால் சொல்லப்படுகிறது.