அதிபரின் மனைவி தொற்றிலிருந்து குணமடைந்தார்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த வைரஸ் சாதாரண மக்களுக்கும் மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா அதிபர் மற்றும் பிரிட்டன் அதிபர் ஆகியோருக்கும் இந்த தொற்று ஏற்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ முழுமையான ஊரடங்கு பிறப்பிப்பதிலும், முக கவசம் அணிவதிலும் நம்பிக்கையில்லாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக அவரும் கொரோனா பிடியில் சிக்கியது மட்டும் இல்லாமல் அவரது மனைவி மிச்செல் போல்சனாரோவுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் தான் கொரோனா வைரசிடமிருந்து மீண்டு வந்து விட்டதாக மிச்செல் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.