பாய் வீட்டு பிரியாணி சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு தூள் தான்!!

Photo of author

By Divya

பாய் வீட்டு பிரியாணி சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு தூள் தான்!!

நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு பிரியாணி.இந்த பிரியாணி மிகவும் வாசனையாகவும்,சுவையாகவும் இருக்க பிரியாணி மசாலா வீட்டு முறையில் செய்வது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பட்டை – 2

*பெருஞ்சீரகம்(சோம்பு) – 2 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பிரியாணி இலை – 2

*ஏலக்காய் – 5

*கிராம்பு – 5

*ஜாதிபத்ரி – 2

*கல்பாசி – 4

*கொத்தமல்லி விதை – 3 தேக்கரண்டி

*வர மிளகாய் – 4 முதல் 5

*அன்னாசி மொக்கு – 1

*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1)அடுப்பில் ஒரு கடாய் வைத்து மிதமான தீயில் 5 வர மிளகாய் போட்டு வறுக்கவும்.வர மிளகாய் கருகி போகாமல் மொறு மொறுப்பாக வரும் வரை வறுத்து கொள்ளுங்கள்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

2)அடுத்து கடாயில் கொத்தமல்லி விதை 3 தேக்கரண்டி சேர்த்து வாசனை வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும்.பின்னர் இதை வரமிளகாய் தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

3)பிறகு கடாயில் கருப்பு மிளகு 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு வறுத்து ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளவும்.

4)அடுத்து சீரகம்,சோம்பு இரண்டையும் கடாயில் சேர்த்து பொரிந்து வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் இதை சேர்த்துக் கொள்ளவும்.

5)தன் பின்னர் பட்டை,இலவங்கம்,கசகசா,ஏலக்காய்,கல்பாசி,அன்னாசி மொக்கு,ஜாதிபத்ரி,பிரியாணி இலை உள்ளிட்டவற்றை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.அதன் பின் அடுப்பை அணைத்து வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிடவும்.

6)பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.பின்னர் இதை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும்.பிரியாணி மசால் இந்த முறையில் செய்தால் பிரியாணி மிகவும் சுவையாகவும்,அதிக வாசனையுடனும் இருக்கும்.