நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? கவலை வேண்டாம்.. இதோ இந்த உணவை சாப்பிட்டால் போதும்!

0
52
#image_title

நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? கவலை வேண்டாம்.. இதோ இந்த உணவை சாப்பிட்டால் போதும்!

ஒருவர் ஆரோக்கியமாக இருக்க அவருக்கு முதலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். ஒருவரது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டால் பல நோய்கள் அவர்களை தாக்கிவிடும். நம் உடம்பில் நோய் கிருமிகளை எதிர்த்து போராட  உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகளவில் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நோய் தாக்கத்திலிருந்து நாம் மீள முடியாது.

ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் இல்லையென்றால் அவர்கள் உடல் சோர்வாகவே இருக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சில உணவுகளை இங்கு நாம் பார்ப்போம் –

மஞ்சள்

மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதில் உள்ள ஆன்டிபயாட்டிக் நமக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும். எனவே, மஞ்சளை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால், கிருமிகள் தொற்றுகளிலிருந்து நாம் விடுபடலாம். மேலும், மஞ்சள் நம் உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்தகரிக்கும். மேலும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.

பூண்டு

பூண்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பூண்டை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். மேலும்,  புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும், நம் உடலை தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும். மேலும், நம் உடலில் வாயுத் தொல்லையை பூண்டு சரிசெய்யும். தாய்பாலை அதிகரிக்க செய்யும். சளியை கரைக்கும். ஜீரண சக்தியை கொடுக்கும்.

வெங்காயம்

வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். வெங்காயத்தில் உள்ள ‘அலிலின்’ என்ற வேதிப்பொருள் நம் உடலை தாக்கும் பாக்டீரியா, நச்சுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் சளி சரியாகும். மேலும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும்.

காய்கறிகள்

காய்கறிகளில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் உட்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் கேரட், பீன்ஸ் மற்றும் பச்சைக் காய்கறிகள் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். மேலும், நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும். இதயத்தை பலப்படுத்தி, சர்க்கரை நோய்யிலிருந்து விடுபடச் செய்யும்.

பழங்கள்

தினமும் நாம் பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். அது மட்டுமல்லாமல் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் மின்னும். மேலும், இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராமல் நம் உடலுக்குள் கட்டுக்குள் வைத்திருக்கும்.

தயிர்

தினமும் நாம் தயிர் சாப்பிட்ட வந்தால் உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும். மேலும், தயிர் செரிமான மண்டலத்தின் செயல் திறனை மேம்படுத்த உதவி செய்யும். தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும், தயிர் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

கிரீன் டீ

தினமும் கிரீன் டீ குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதில் உள்ள ஆன்டியாக்ஸிடன்டுகள் காய்ச்சல், சளி போன்றவற்றை எதிர்த்து போராடும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். மேலும், இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவி செய்யும்.