தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!!

0
27
#image_title

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!!

மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான்.
இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது.தூதுவளை சளி,இருமலுக்கு சிறந்த அருமருந்தாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*தூதுவளை இலை – 2 கப்

*உருளை கிழங்கு – 1(நறுக்கியது)

*வெங்காயம் – 1(நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 1

*பூண்டு – 5 பற்கள்

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 2 ஸ்பூன்

*நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி

*தேங்காய்ப் பால் – 1/4 கப்

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*புளி – சிறு துண்டு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 1 கப் தூதுவளை இலைகளை போட்டு நன்கு அலசிக் கொள்ளவும்.அதில் உள்ள முட்கள் அனைத்தையும் நீக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள புளியை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.அடுப்பில் கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றவும்.அவை சூடேறியதும் தூதுவளை இலைகளை சேர்த்து வதக்கி கொள்ளவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் நல்லெண்ணெய் 4 தேக்கரண்டி ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு மற்றும் 1/2 தேக்கரண்டி வெந்தயம் போட்டு பொரிய விடவும்.பின்னர் பூண்டு, நறுக்கிய வெங்காயம்,நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதன் பின் நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கை அதில் சேரத்து நன்கு வதக்கவும்.அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.தொடர்ந்து கொத்தமல்லி தூள்,மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு,வதக்கி வைத்துள்ள தூதுவளை இலை மற்றும் தேங்காய் பால் ஊற்றி பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.