கூலித்தொளிலாளியின் மகன்கள் பரிதாபமாக கிணற்றில் மூழ்கி சாவு!

Photo of author

By Rupa

கூலித்தொளிலாளியின் மகன்கள் பரிதாபமாக கிணற்றில் மூழ்கி சாவு!

சென்னையில் உள்ள அரசு மேல் நிலையில் படிக்கும் மாணவர் இளங்கோ இவருக்கு வயது 15. இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மேலப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றார். பக்கத்து வீட்டுக்காரரான மற்றொரு கூலித் தொழிலாளி குமார் இவருடைய மகன் சுகேசன் (வயது 10) மேலப்பட்டு கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இளங்கோ மற்றும் சுகேசன் நேற்று மதியம் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த இரு வீட்டு பெற்றோரும் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது  சுகேசன், இளங்கோ இருவரும் கிணற்றில் பிணமாக மிதப்பதைக் கண்ட உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியை அறிந்த  திருக்கழுக்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு வந்தனர். மேலும் இவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.