பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது – மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில்!

0
195
#image_title

பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு அளித்துள்ளது.

தஞ்சை லாவண்யா தற்கொலைக்கான மூல காரணத்தை கண்டறிய என்ஐஏ, சிபிஐ அல்லது என் எச் ஆர் சி மற்றும் என் சி பி ஆர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என கோரி பாஜகவைச் சேர்ந்த அஸ்வின் குமார் உபாத்தியாயா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு திறந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தஞ்சை லாவண்யா பேசியதாக வெளியான விடியோவை சிபிஐ விசாரித்து வருகிறது, சிபிஐ விசாரணையில்தான் உண்மைகள் தெரிய வரும்.

சிதம்பரம் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ருத்ராட்சை அணிந்திருந்ததற்காகவும் நெற்றியில் சந்தன பொட்டு வைத்திருந்ததற்காகவும் 12-ஆம் வகுப்பு மாணவன் தாக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் பொய்.

ஒருவர் தான் விரும்பும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் உரிமை அரசமைப்புச் சட்டத்தின் படி உள்ளது. இதன்படி கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் சட்டத்துக்கு எதிரானவையாக இல்லை. அதேசமயம் பொது ஒழுங்குக்கு எதிராக மதத்தைப் பரப்பும் பட்சத்தில் அதை தீவிரமாக பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித கட்டாய மதமாற்றமும் இல்லை. எனவே மனுதாரரின் கோரிக்கை தமிழ்நாட்டுக்கு பொருந்தாது. பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

Previous articleஎன்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!
Next articleதமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாட்டம்!