அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது – அன்புமணி ராமதாஸ் காட்டம்!
பாமக தலைவர் அம்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் புதிய ரேசன் கார்டு விவகாரத்தில் தமிழக அரசு தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறது என்று ஆவேசமாக தெரிவித்து இருக்கிறார்.
ரேசன் கார்டு இந்திய குடிமகன்களின் அடையாளமாக இருந்து வருகிறது. ரேசன் கடைகளில் மலிவு விலைக்கு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி ரேசன் கார்டு மூலம் பல நலத்திட்ட உதவிகள் கிடைக்கபெற்று வருவதால் மாதந்தோறும் 40000க்கும் அதிகமானோர் புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பத்து வருகின்றனர்.
புதிதாக ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தால் 15 நாட்களில் சம்மந்தப்பட்டவர்களுக்கு தபால் மூலம் அட்டை வந்துவிடுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு இன்று வரை ரேசன் கார்டு வழங்கப்படாமல் இருக்கின்றது.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். குடும்ப அட்டை அரசு நலத் திட்டங்களை பெற ஏழை மக்களுக்கு பேருதவியாக இருக்கின்றது. பல குடும்பங்கள் ரேசன் பொருட்களை நம்பி இருக்கும் நிலையில் புதிய ரேசன் கார்டு வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த ஓர் ஆண்டிற்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் புதிய ரேசன் கார்டு வழங்கிய தமிழக அரசு ஏன் இவ்வளவு மாதம் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது. முன்பு போல் இல்லாமல் தற்பொழுது புதிய ரேசன் கார்டு விண்ணப்பங்களை சரிபார்ப்பது சுலபமாகிவிட்ட நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை ரேசன் கார்டு கிடைக்காதது கண்டிக்கத்தக்கது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக புதிய ரேசன் கார்டு வழங்காமல் இருப்பது தமிழக அரசின் தவறான அணுகுமுறை. எத்தனை பேர் விண்ணப்பம் செய்தாலும் அவர்களுக்கு உரிய நாட்களில் ரேசன் கார்டு வழங்கப்பட்டு விடவேண்டும். மக்களின் நலனில் அக்கறை இருந்தால் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேசன் கார்டுகளை வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி இருக்கின்றார்.