பெண்ணின் தலையில் ஏறிய லாரி. மனதை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

Photo of author

By Vijay

பெண்ணின் தலையில் ஏறிய லாரி. மனதை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

Vijay

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதால் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் தலையில் லாரி ஏறி இறங்கிய அபார விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, காண்போரை பெரும் அதிர்ச்சியையும் மன உடைச்சைலையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி.

இன்று காலை மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயலட்சுமி, ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அவ்வபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெயலட்சுமியின் தலைமீது, பின்னால் வந்த லாரியின் முன்பக்க டயர் ஏறி இறங்கியது.

இதில் தலை நசுங்கிய நிலையில் ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே அநிநாயமாக உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.‌