நின்று கொண்டிருந்த லாரியில் பின்னால் மோதிய வேன்!! 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!! 

Photo of author

By Amutha

நின்று கொண்டிருந்த லாரியில் பின்னால் மோதிய வேன்!! 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!! 

பழுதின் காரணமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த மினி வேன் மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் இந்த கோர சம்பவம் நடைபெற்றது. லாரி மீது மினி வேன் மோதியதில் 3குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். நான்கு 4பேர் காயமடைந்தனர்.

ராஜ்கோட்- அகமதாபாத் நெடுஞ்சாலையில் பகோதரா  கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் பழுதானதால் ஒரு லாரி பழுதை சரி செய்வதற்காக நின்று கொண்டிருந்தது.

அப்போது அந்த சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த மினி வேன் ஒன்று நின்ற லாரியின் மீது வேகமாக மோதியது. இந்த  கோர விபத்தில் 3 குழந்தைகள்,  5 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

இதை அடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தஅந்த  கிராம  காவல் நிலைய போலீசார்  இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  நின்ற நின்ற லாரியின் மீது வேன் மோதியதில் பத்து பேர் பலியானது  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.