உங்கள் உடம்பில் உள்ள தேமல்.. மின்னல் வேகத்தில் மறைந்து போக நீங்கள் செய்ய வேண்டியவை!

Photo of author

By Divya

உங்கள் உடம்பில் உள்ள தேமல்.. மின்னல் வேகத்தில் மறைந்து போக நீங்கள் செய்ய வேண்டியவை!

உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி கிடந்தால் சருமத்தில் பல வித பாதிப்புகள் ஏற்படும். இந்த சரும பாதிப்புகளில் ஒன்றானாக தேமல் தோன்றி விட்டால் தோல் பலவித பிரச்சனைகளை பார்க்கக் கூடும்.

இந்த தேமல் பாதிப்பு சில தினங்களில் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

*வெற்றிலை
*உப்பு
*மஞ்சள்
*மிளகு

செய்முறை…

காம்பு நீக்கிய வெற்றிலை எடுத்து உரலில் போட்டு உப்பு, மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து அரைத்து தேமல் மீது பூசினால் கிருமிகள் அழிக்கப்பட்டு அவை விரைவில் குணமாகும்.

*கற்றாழை ஜெல்
*மஞ்சள்

செய்முறை…

கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்து மஞ்சள் கலந்து தேமல் மீது பூசினால் அவை விரைவில் குணமாகும்.

*வேப்பிலை
*மஞ்சள்

செய்முறை…

ஒரு கைப்படி அளவு வேப்பிலை எடுத்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். பின்னர் அதில் மஞ்சள் கலந்து தேமல் உள்ள பூசி வரலாம்.

*ஆமணக்கு எண்ணெய்

செய்முறை…

தேவையான அளவு ஆமணக்கு எண்ணெய் எடுத்து தேமல் மீது பூசினால் தேமல் மறையும்.