தேமல்? இதை குணமாக்க காசு கொடுத்தால் கூட இப்படி ஒரு க்ரீம் கிடைக்காது!!

Photo of author

By Divya

தேமல்? இதை குணமாக்க காசு கொடுத்தால் கூட இப்படி ஒரு க்ரீம் கிடைக்காது!!

சருமத்தில் உள்ள தேமல், கரும்புள்ளிகள் மறைய குப்பைமேனி க்ரீம் பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை
2)சோப் பேஸ்
3)லேவண்டர் ஆயில்
4)தேன்

செய்முறை:-

சரும பிரச்சனைகளை போக்கக் குப்பைமேனி இலை பெரிதும் உதவும். ஒரு கப் குப்பைமேனி இலையை எடுத்து தண்ணீரில் அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் குப்பைமேனி இலையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். க்ரீம் பதத்திற்கு அரைக்கவும்.

பிறகு 15 கிராம் அளவு சோப் பேஸை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் அரைத்த குப்பைமேனி பேஸ்ட் மற்றும் சோப் பேஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை டபுள் பாய்லிங் முறைப்படி கொதிக்க விட்டு எடுக்கவும்.

இந்த குப்பைமேனி கலவையில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் லேவண்டர் ஆயில் ஒரு தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.

இதை 3 மணி நேரத்திற்கு ஆறவிட்டு பின்னர் ஒரு ஸ்பூன் கொண்டு நன்கு கலக்கி விடவும். இந்த க்ரீமை ஒரு டப்பாவில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.

தினமும் இந்த க்ரீமை முகத்திற்கு பயன்படுத்தி கழுவி வந்தால் முகத்தில் உள்ள தேமல், மங்கு அனைத்தும் குணமாகும்.