தடுப்பூசி குறித்து எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லை

Photo of author

By Parthipan K

தடுப்பூசி குறித்து எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லை

Parthipan K

உலக நாடுகளை அனைத்தும் கொரோனா வைரஸ்  பயமுறுத்தி வரும் நிலையில் இந்த நோய்க்கான தடுப்பூசியை நாங்கள் தான் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளோம் என்று ரஷ்யா கடந்த வாரம் அறிவித்தது. அந்நாட்டு பிரதமர் பேசும்போது தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரகணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த விவரங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று கூறினார். இதனால் உலக நாடுகள்  அனைத்துக்கும்  ரஷ்யா மீது சந்தேகம் எழுந்தது. ஆனால் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ தடுப்பூசி உற்பத்தி சில வாரங்களில் தொடங்கும் மேலும் எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லை என்று கூறினார்.