நகசுத்திக்கு இதை விட சிறந்த கை வைத்தியம் இருக்க வாய்ப்பே இல்லை!!

Photo of author

By Divya

நகசுத்திக்கு இதை விட சிறந்த கை வைத்தியம் இருக்க வாய்ப்பே இல்லை!!

நக சுத்தி ஏற்பட்டால் அதை உடனே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான வலி ஏற்பட்டு செப்டிக்காகி விடும். இந்த நகசுத்தியை வீட்டில் உள்ள சாதாரண பொருட்கள் கொண்டு குணமாக்கி கொள்ளலாம்.

1)விக்ஸ் வேப்பரப்
2)வெந்நீர்

ஒரு அகலமான பாத்திரத்தில் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி நகசுத்தி ஏற்பட்டிற்கும் கை அல்லது காலை வைத்து 5 நிமிடங்கள் ஊற விடவும்.

பிறகு அதை காட்டன் துணியால் துடைத்து விட்டு விக்ஸ் வேப்பரப் போட்டு 2 நிமிடம் மஜாஜ் செய்யவும். பின்னர் விக்ஸ் வேப்பரப்பை காயவிட்டு மீண்டும் வெந்நீர் கொண்டு நகசுத்தி உள்ள விரலை சுத்தம் செய்யவும். இவ்வாறு 3 தினங்கள் செய்தால் நகசுத்தி முழுமையாக குணமாகும்.

1)உப்பு
2)வெந்நீர்

ஒரு பாத்திரம் முழுவதும் வெந்நீர் ஊற்றி சிறிது கல் உப்பு சேர்த்து நகசுத்தி உள்ள விரலை 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பிறகு விரலை ஒரு காட்டன் துணியால் துடைக்கவும். இவ்வாறு காலை மாலை என்று 3 தினங்கள் செய்து வந்தால் நக சுத்தி முழுமையாக குணமாகும்.

1)சோடா
2)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி 1 அல்லது 2 தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து பேஸ்டாக்கவும. இதை கை மற்றும் கால்களில் நக சுத்தி உள்ள விரலில் பூசி வந்தால் விரைவில் நக சுத்தி குணமாகும்.