உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!!

Photo of author

By Divya

உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!!

Divya

உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!!

உடல் எடைகூடிக் கொண்டே சென்றால் ஆபாய நோய்கள் எளிதில் எட்டி பார்த்து விடும்.கடுமையான உணவுக் கட்டுப்பாடு,உடல் உழைப்பு இருந்தால் உடல் பருமன் ஆவது முழுமையாக தடுக்கப்படும்.

அதனோடு பழங்களை அரைத்து குடித்து வந்தாலும் உடல் எடை சரசரவென குறைந்து விடும்.

1)மாதுளை ஜூஸ்

சிவப்பு நிறத்தில் உள்ள மாதுளையில் வைட்டமின்கள்,தாதுக்கள்,ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்து இருக்கிறது.

மாதுளம் பழ ஜூஸில் சர்க்கரை போன்ற இனிப்பு சுவை சேர்க்காமல் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டு இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

இரத்த சோகை,உயர் இரத்த அழுத்தம்,மந்த நிலை ஆகியவை மாதுளை ஜூஸ் குடிப்பதால் குணமாகும்.

முடி வளர்ச்சி,கருப்பை ஆரோக்கியத்திற்கு மாதுளை சிறந்த தீர்வாக இருக்கிறது.

2)கருப்பு திராட்சை ஜூஸ்

இதில் அதிகளவு நார்ச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.அதுமட்டும் இன்றி வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருப்பதால் இதை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

மலச்சிக்கல்,உடல் பருமன்,செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.கருப்பு திராட்சையில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மேனி மினுமினுக்கும்.