வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை!

0
111
#image_title

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை!

கோடை வெயில் தாக்கம் தற்பொழுது இருந்தே தெரிகிறது. அதிக வெப்பம், அனல் காற்று வீசுவதால் மதிய நேரத்தில் வெளியில் செல்லவே பலர் அஞ்சுகின்றனர். பொதுவாக பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் வெயில் காலத்தில் உடல் சோர்வுடன் காணப்படுவர். காரணம் உடலில் உள்ள எனர்ஜி வியர்வை வழியாக வெளியேறி விடும். அதுமட்டும் இன்றி வெயில் காலத்தில் அம்மை, சூட்டு கொப்பளம், வியர்வை கொப்பளம், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வெயில் காலத்தில் சில பொருட்களை உட்கொண்டு வருவதன் மூலம் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

முதலில் குளிர்காலம், வெயில் காலம் என்று எந்த காலமாக இருந்தாலும் உடலுக்கு தேவையான தண்ணீரை கட்டாயம் அருந்த வேண்டும். குறிப்பாக வெயில் காலத்தில் அதிகளவு தாகம் எடுக்கும். உடல், தொண்டை வறண்டு போகும். எனவே தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மண் பானையில் ஊற்றி வைக்கப்பட்ட நீர் அருந்துவது நல்லது.

அடுத்து தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழம், இளநீர், நுங்கு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் தண்ணீர் நிறைந்த பொருட்களை உண்ணுதல் நல்லது.

புடலை, பசுரைக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது நல்லது.

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் உடல் சூடு முழுமையாக குறையும்.