கோடை கால வியர்க்குரு கொப்பளம் மறைய இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்!
கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை வியர்க்குரு. இவை உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறும் பொழுது வியர்வையில் உள்ள உப்புகள் தோலில் உள்ள துவாரங்களில் அடைத்துக் கொள்வதால் ஏற்படுகிறது.
இந்த வியர்க்குரு பாதிப்பில் இருந்து தப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியக் குறிப்புகளை ட்ரை பண்ணுங்கள்.
சந்தனம்
இவை குளிர்ச்சி நிறைந்த பொருள். சந்தனத்தை தண்ணீரில் குழைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டால் வியர்க்குரு குணமாகும்.
நுங்கு
பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பொருள் நுங்கு. இதை கோடை காலத்தில் சாப்பிட்டு வருவது நல்லது. அதுமட்டும் இன்றி நுங்கை வியர்க்குரு மீது பூசினால் அவை விரைவில் குணமாகும்.
கற்றாழை ஜெல்
சிறிது ப்ரஸ் கற்றாழை ஜெல்லை வியர்க்குரு மீது பூசினால் அவை விரைவில் மறையும்.
மஞ்சள்
ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி மஞ்சள், சந்தனம் மற்றும் வேப்பிலை சாற்றை சேர்த்து பேஸ்டாக்கி வியர்க்குரு மீது பூசினால் அவை எளிதில் குணமாகும்.