60 வயதிலும் 20 வயது போல என்றும் இளமையாக இருக்க வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருள்கள் போதும்!!

0
392

60 வயதிலும் 20 வயது போல என்றும் இளமையாக இருக்க வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருள்கள் போதும்!!

60 வயதிலும் 20 வயது போல இளமையாக எந்த ஒரு நோயும் இல்லாமல் இருக்க வீட்டில் இருக்கக்கூடிய இரண்டு பொருட்களை வைத்தே ஒரு சுலபமான காயகல்பம் எப்படி தயார் செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த காயகல்பத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் இருக்கக்கூடிய ராஜ உறுப்புகள் அனைத்தும் நன்கு வேலை செய்ய ஆரம்பிக்கும்.

உடம்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும். மேலும் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி சுருக்கமே வரவிடாமல் தடுக்கும். கண்பார்வை திறனை அதிகரித்து ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அடைப்புகளை நீக்கி ரத்தத்தை நன்கு சுத்திகரிக்கும்.

மேலும் மலச்சிக்கல் வயிறு வாயு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும். வாழ்நாள் முழுவதுமே மூட்டு வலி முழங்கால் வலி என்று எந்த பிரச்சனையும் இருக்காது அப்படி ஒரு அருமையான காயகல்பத்தை எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
தேன்
மிளகு

செய்முறை:
இது செய்வதற்கு முதலில் சுத்தமான ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளவும். கண்ணாடி பாட்டில் இல்லை என்றால் காற்று புகாத ஒரு சில்வர் கண்டெய்னரை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது இந்த கண்ணாடி பாட்டிலில் 50 மில்லி லிட்டர் அளவு சுத்தமான தேனை சேர்த்துக் கொள்ளவும். இப்போது இந்த 50 மில்லி லிட்டர் தேனீருக்கு 10 கிராம் அளவு சமையல் பயன்படுத்தக்கூடிய மிளகை சேர்த்துக் கொள்ளவும்.

தேனையும் மிளகையும் கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்கு இருக்க மூடி ஒரு மூன்று வாரத்திற்கு இதை அப்படியே எடுக்காமல் விட்டு விடவும். அந்தத் தேனில் மிளகு நன்றாக கூற வேண்டும் அது எந்த அளவுக்கு ஊறி வருகிறதோ அந்த அளவிற்கு காயகல்பம் தயாராகும். மூன்று வாரங்கள் கழித்து தேனில் மிளகு நன்கு உரிய பிறகு இதை சாப்பிட்டு வரலாம்.

இதை ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் தாராளமாக சாப்பிட்டு வரலாம். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி தேனுடன் மூன்று மிளகை சேர்த்து மிகவும் மெது மெதுவாக அதை மென்று விழுங்க வேண்டும். தேனில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் இவ்வாறு தேனில் ஊறிய மிளகை நாம் தினமும் சாப்பிட்டு வர உடலில் இருக்கக்கூடிய ராஜ உறுப்புகள் அனைத்தும் நன்கு சீரடைய ஆரம்பிக்கும்.

ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அடைப்புகள் அனைத்தையும் நீக்கி ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பு செய்யும். முகத்தில் இருக்கக்கூடிய தோல் சுருக்கங்களை தடுக்கும். மேலும் வாதம் பித்தம் கபம் போன்ற எந்த பிரச்சினையையும் இது நெருங்க விடாது. உங்களுக்கு தலையில் வெள்ளை முடி இருந்தால் கூட வெள்ளை முடியை கருமையாக மாற்றும் தன்மை இந்த காயகல்பத்திற்கு உள்ளது.

இதை மிகவும் அதிகமாகவும் சாப்பிடக்கூடாது அரை தேக்கரண்டி அளவு தேனுடன் மூன்று மிளகை மட்டுமே சாப்பிட வேண்டும். மேலும் இதை மாலை நேரத்தில் ஐந்திலிருந்து ஆறு மணிக்கு கொள்ளும் சாப்பிட்டு வரலாம். இதை இவர்கள் சாப்பிடக் கூடாது என்று எதுவும் கிடையாது அனைவரும் இதை தாராளமாக சாப்பிட்டு வரலாம்.

 

author avatar
CineDesk