இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்!
இந்த காலகட்டத்தில் உடலில் நோய் வைத்திருப்பவர்களே அதிகம். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே இதற்கு முதன்மை காரணம் ஆகும்.
சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்தும் விருந்தாளி போல் வந்து செல்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் இதுபோன்ற தொந்தரவுகளை பார்க்க நேரிடும்.
இதில் இருந்து உடலை காத்துக் கொள்ள வாரம் ஒருமுறை மூலிகை கசாயம் செய்து குடிங்கள்.
தேவையான பொருட்கள்…
*மிளகு
*துளசி
*ஓமவல்லி
*வெற்றிலை
*இஞ்சி
*தூதுவளை இலை பொடி/ இலை
*ஆடாதோடை சூரணம்
*மஞ்சள்
*தேன்
கசாயம் செய்வது எப்படி?
கருப்பு மிளகு 1/4 ஸ்பூன் அளவு எடுத்து இடித்துக் கொள்ளவும். அடுத்து 1/4 கைப்படி துளசி, 2 ஓமவல்லி, 1 வெற்றிலை, 1 துண்டு இஞ்சி, 1/4 கைப்பிடி தூதுவளை இலை அல்லது 1 ஸ்பூன் தூதுவளை பவுடர், 1 ஸ்பூன் ஆடாதோடை சூரணம் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள்.. இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு 400 மில்லி அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
அடுப்பில் இந்த பாத்திரத்தை வைத்து 200 மில்லி அளவு தண்ணீர் சுண்டி வரும் வரை காய்ச்சி ஆறவிட்டு கொள்ளவும்.
இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி விருப்பப்பட்டால் தேன் கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்தால் நெஞ்சு சளி, வறட்டு இருமல், காய்ச்சல், ஆஸ்துமா, சைனஸ் ஆகிய அனைத்து பிரச்சனைகளும் அகலும்.