சிக்கலான மாதவிடாயை சீராக்க உதவும் மேஜிக் பானம் இது..!!

Photo of author

By Divya

சிக்கலான மாதவிடாயை சீராக்க உதவும் மேஜிக் பானம் இது..!!

இன்றைய காலத்தில் முறையற்ற மாதவிடாய், அதிகளவு இரத்த போக்கு, மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்டவைகளால் பெருமபாலான பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் கர்ப்பம் தரிப்பதில் தாமதம், கர்ப்ப காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் சூழல் உருவாகிறது. இதற்கு இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது.

இதற்கு ஆரம்ப நிலையில் தீர்வு காண்பது மிகவும் நல்லது. இல்லையென்றால் பின்னாளில் உடல் சார்ந்த பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடும். இந்த முறையற்ற மாதவிடாய் பாதிப்பை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*கருஞ்சீரகம்

*இஞ்சி

*வெல்லம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1 துண்டு இடித்த இஞ்சி, 1 தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு தேவையான அளவு வெல்லம் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வரை கொதிக்க விட்டு வடிகட்டி பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் உடனடியாக வந்து விடும்.