எப்பேர்ப்பட்ட மூல நோயையும் அசால்ட்டாக குணமாக்கும் மருத்துவம் இது!

Photo of author

By Divya

எப்பேர்ப்பட்ட மூல நோயையும் அசால்ட்டாக குணமாக்கும் மருத்துவம் இது!

நவீன காலத்தில் இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் நோயாக மூலம்(பைல்ஸ்) உருவெடுத்து விட்டது.

இந்த மூலம்… மலச்சிக்கல் பாதிப்பை சந்திக்கும் நபர்களை குறி வைக்கிறது. செரிமானம் ஆகாத உணவை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படும்.

இதனால் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையென்றால் நிச்சயம் அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சுண்டைக்காய்
2)தக்காளி
3)வெங்காயம்
4)பச்சை மிளாகாய்
5)பூண்டு
6)உப்பு
7)மஞ்சள் தூள்
8)கொத்தமல்லி தாழை
9)எண்ணெய்

செய்முறை…

மூல நோயை வேரோடு அகற்ற உதவும் சுண்டைக்காய் அரை கப் அளவு எடுத்துக் கொள்ளவும். காம்பு இருந்தால் நீக்கி விட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு தக்காளி, மிளகாய் மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தை நீட்டவாக்கில் நறுக்கி வைக்கவும்.

3 பல் பூண்டு தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் நறுக்கிய பூண்டு, மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். இதற்கு அடுத்து இடித்த சுண்டைக்காய் சேர்த்து கிளறிவிடவும். அதன் பின்னர் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

சுண்டைக்காய் சூப் நன்கு கொதித்து வந்ததும் சிறிது கொத்தமல்லி தாழை நறுக்கி போட்டு கலந்து விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விடவும். இந்த சூப்பை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றி குடிக்கவும்.

வாரத்திற்கு இருமுறை இந்த சூப் குடித்து வந்தால் பைல்ஸ் முற்றிலும் குணமாகிவிடும்.