விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி தேதி! வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

0
127
This is the last date for farmers to get crop insurance! Important announcement issued by the Joint Director of Agriculture
This is the last date for farmers to get crop insurance! Important announcement issued by the Joint Director of Agriculture

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி தேதி! வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் விவசாயிகள் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்யுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குனர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர  மாவட்டங்களில் இரவு பகலாக கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால்  சாலைகளில் மழைநீர் தேங்கி பொது மக்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மற்ற பகுதிகளை தொடர்ந்து விவசாயம் அதிகம் செய்ய கூடிய டெல்டா  மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையால் விவசாயம் செய்யப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த வடகிழக்கு பருவ மழையானது அடுத்த 2 மாதங்களுக்கு தொடரும். அதனால் பயிர்களுக்கு காப்பீடு செய்வது அவசியம். தமிழக அரசின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில் வடகிழக்கு பருவ மழை பொழிய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் சம்பா பருவ நெற்பயிர்களுக்கு வரும் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என்றும் கூறியுள்ளார்.