அதிகப்படியான நெஞ்செரிச்சல் முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் உரிய தீர்வு இந்த ஜூஸ்!!

0
98
#image_title

அதிகப்படியான நெஞ்செரிச்சல் முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் உரிய தீர்வு இந்த ஜூஸ்!!

நவீன கால வாழ்க்கை முறையில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் ஜூஸ்(பழச்சாறு) முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புக்கு அருமருந்தாக உள்ள கருப்பு திராட்சையில் ஜூஸ் செய்து பருகினால் உடலில் நடக்கும் மாயாஜாலத்தை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.

கருப்பு திராட்சையில் அடங்கி இருக்கும் ஊட்டச் சத்துக்கள்:-

வைட்டமின் பி, சி, கால்சியம், போலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கருப்பு திராட்சை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்:-

**நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் கருப்பு திராட்சை ஜூஸ் பருகுவது நல்லது. கருப்பு திட்ராட்சையில் உள்ள வைட்டமின் சி, நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே வலிமையாக்க உதவுகிறது.

**தினமும் கருப்பு திராட்சை ஜூஸ் அருந்துவதால் இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இளம் வயது மாரடைப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி இந்த ஜூஸ் பருகுவது நல்லது.

**ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் ஏற்படும் அசிடிட்டி(நெஞ்செரிச்சல்) பாதிப்பை குணமாக்க தினமும் திராட்சை ஜூஸ் அருந்துவது நல்லது.

**திராட்சையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் உடலில் ஏற்படும் இரத்த அழுதத்தை சரி செய்ய உதவுகிறது.

**ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் உடல் பருமனை ஆரோக்கியமான முறையில் குறைக்க நினைக்க வேண்டுமென்றால் தினமும் திராட்சை ஜூஸ் பருகலாம்.

**தீராத ஒற்றை தலைவலி பாதிப்பு உடனடியாக குணமாக இந்த ஜூஸ் செய்து பருகலாம்.

**நம் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த ஜூஸ் பெரிதும் உதவுகிறது.

**மலச்சிக்கல் பாதிப்பை சில நிமிடங்களில் சரி செய்ய இந்த ஜூஸ் பருகலாம்.

**இரத்த சோகையால் அவதிப்படும் நபர்கள் தினமும் கருப்பு திராட்சை ஜூஸ் பருகினால் விரைவில் அந்த பாதிப்பு குணமாகும்.

Previous articleஅடேங்கப்பா சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Next articleஉங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய வழிகள்!!