இந்த எண்ணெய் உங்கள் கை கால் மூட்டு வலியை முழுமையாக குணமாக்கும்!
கால்சியம் குறைபாடு, முதுமை, எலும்புகளில் அடிபடுதல் போன்ற காரணங்களால் கை, கால், மூட்டு பகுதியில் வலி, வீக்கம், எலும்பு தேய்மானம், எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படத் தொடங்கி விடுகிறது.
இதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பெண்ணெய்
2)நல்லெண்ணெய்
3)தேங்காய் எண்ணெய்
4)சூடம்
வேப்பெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் – மூன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் நன்கு சூடானதும் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம்(சூடம்) இரண்டு போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.
இதை இளஞ்சூடாக இருக்கும் பொழுது கை கால் மூட்டுகளின் மேல் தடவி மஜாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் வீக்கம், வலி, எரிச்சல் முழுமையாக குணமாகும்.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றிற்கும் கை கால் மூட்டு வலிகளை குணமாக்கும் தன்மை உள்ளது. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.