இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

0
141
#image_title

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

கோடை காலம் தொடங்கிய நாளில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது.வீட்டை விட்டு வெளியில் சென்றாலே வெயில் தாக்கம் தாங்க முடியாமல் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க நேரிடும்.

குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.உடலில் உள்ள நீர் வியர்வை வழியாக வெளியேற்றப்பட்டு விடுவதால் உடல் களைப்பு ஏற்படும்.எனவே இந்த கோடை காலத்தில் அதிகளவு நீர் அருந்துதல்,இளநீர்,மோர்,நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் ஆகியவற்றை அதிகளவு உண்ணுதல் வேண்டும்.அந்தவகையில் கோடை காலத்தில் கற்றாழையில் ஜூஸ் அல்லது சர்ப்த் செய்து குடிப்பதினால் உடல் சூட்டை முழுமையாக தணித்துக் கொள்ள முடியும்.

கற்றாழையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த கற்றாழையில் உள்ள ஜெல்லை பிரித்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் நீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.உடலில் உள்ள சூடு முழுமையாக தணியும்.சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு கற்றாழை ஜூஸ் சிறந்த தீர்வாக உள்ளது.