சிறுநீரக தொற்றுக்களை சரி செய்ய உதவும் இந்த ஒரு பொடி!!
உங்களில் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பொழுது ஒருவித எரிச்சல், வலி உணர்வு ஏற்படும். இதை சிறுநீர் தொற்று என்று சொல்வார்கள். இந்த சிறுநீர் தொற்று பிரச்சனையை போக்க கருப்பு உளுந்து, வெந்தயம் சிறந்த தீர்வாக இருக்கும். இதை இரண்டையும் வறுத்த பொடி செய்து காய்ச்சி பருகி வருவதன் மூலம் சிறுநீர் தொற்று பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
*கருப்பு உளுந்து
*வெந்தயம்
*தண்ணீர்
செய்முறை…
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி கருப்பு உளுந்து மற்றும் 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் தயார் செய்து வைத்துள்ள கருப்பு உளுந்து + வெந்தயப் பொடியை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி காலையில் வெறும் வயிற்றில் பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் சிறுநீர் தொற்று அனைத்தும் சரியாகி விடும்.