சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..!

Photo of author

By Divya

சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..!

குளிர்காலத்தில் சளி, இருமல் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பாதிப்பு ஆகும். காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த சளி, வறட்டு இருமல் பாதிப்பை முழுமையாக குணமாக்கி கொள்ள மாதுளை பழத்தின் தோலில் டீ செய்து குடிங்கள்.

இந்த மாதுளை தோல் டீ சளி, வறட்டு இருமலுக்கு சிறந்த நிவாரணம் ஆகும். சுவாசம் தொடர்பான பாதிப்பை முழுமையாக குணப்படுத்த உதவுகிறது.

மாதுளை தோல் டீ செய்வது எப்படி?

மாதுளை பழத்தின் தோலை வெயிலில் காயவைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 1 ஸ்பூன் அளவு மாதுளை தோல் பவுடரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்தால் சளி, வறட்டு இருமல் முழுமையாக குணமாகும்.