“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!

Photo of author

By Divya

“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!

Divya

“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!

பக்கவாதத்தை சரி செய்யக் கூடிய இயற்கை மருத்துவம் குறித்த தொகுப்பு இதோ. பக்கவாதத்தில் இரு வகை உண்டு. மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது நரம்புகள் செயலிழந்து பக்கவாதம் ஏற்படும். இது ஒருவகை பக்கவாதம்.

இரத்த கொதிப்பினால் மூளைக்கு செல்ல கூடிய இரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும். இது ஒருவகை பக்கவாதம்.

எந்த வகை பக்கவாதமாக இருந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை மருத்துவத்தை பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

*வசம்பு பொடி
*திப்பிலி பொடி
*மஞ்சள் தூள்
*வல்லாரை பொடி

தயாரிப்பு…

ஒரு கிண்ணத்தில் 1/4 ஸ்பூன் திப்பிலி பொடி, 1/4 ஸ்பூன் வல்லாரை பொடி, 1/4 ஸ்பூன் வசம்பு பொடி, ஒரு சிட்டிகை குழம்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து அதில் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலக்கி பருகவும். தினமும் காலை, இரவு உணவிற்கு முன் குடிக்க வேண்டும்.

இந்த பானம் மூளைக்கு செல்லும் நரம்புகளை பலப்படுத்தும். இதனால் நரம்பு தளர்ச்சி, பக்க வாதம் உள்ளிட்ட பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

மூளைக்கு செல்லும் இரத்த குழாய் அடைப்பை குணமாக்கும். உடலில் இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவும்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த பானத்தை குடிக்க தொடங்கிய 2 வாரங்களில் பலனை கண்கூடாக பார்க்க முடியும்.